Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது என்றால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு உண்டானது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். தொடர்ந்து நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலோர மக்களுக்கு மழை வெள்ள பாதிப்பு பிரச்னையை மேலும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் ரேசன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களுக்கு தனியாக கூடுதல் நிதி நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!
தென் மாவட்ட மக்கள் இன்னும் அவதியுற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அங்கு அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பக்கத்தில்,"பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு @Subramanian_ma தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட மாண்புமிகு @MRKPanneer… pic.twitter.com/8NAOIjviFT
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.
தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது...' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ