'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது...' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்!

Tamil Nadu Latest News: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் முத்துசாமி பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2023, 05:51 PM IST
  • சரியான முறையில்தான் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் - முத்துசாமி
  • ஒட்டுமொத்தமாக குறைபாடு உள்ளது என்பதை ஏற்க முடியாத ஒன்று - முத்துசாமி
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் பிரச்சினை உள்ளது - முத்துசாமி
'நிர்மலா சீதாராமன் சொன்னது தவறானது...' ஒரே போடாக போட்ட தமிழக அமைச்சர்! title=

Tamil Nadu Latest News: ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருநகர் காலனி அரசு தொடக்க பள்ளியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' பொதுமக்கள் குறைத் தீர்ப்பு முகாமில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி,"ஈரோடு மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாமின் கீழ் 10 ஆயிரம் மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டு ஏறக்குறைய மனுக்கள் மீது தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தவறான செய்தியை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

புயல் மற்றும் தென் மாவட்டங்களில் முதல்வர் தனித்தனியாக ஆய்வு செய்து அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் பிரச்சினை உள்ளது. 

மேலும் படிக்க | 'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!

ஆனால் ஒட்டுமொத்தமாக குறைபாடு உள்ளது என்பதை ஏற்க முடியாத ஒன்று என்றார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைந்து மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் நினைத்து வருகிறார். தென் மாவட்ட பகுதியில் சேதமடைந்த விவசாய விளை நிலத்திற்கு ஏற்ப கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். 

மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள வீட்டுவசதி வாரியத்தின் கீழ் சேதமடைந்துள்ள வீடுகள் என்று எதுவும் இல்லை. இருப்பினும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சரியான முறையில்தான் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். இதில் தவறு இருப்பதாக சொன்னால் அதற்கு விளக்கம் அளிக்கிறார். அடுத்தடுத்து அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று அண்ணாமலை சொல்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லி வருகிறார்" என்றார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அதில், தமிழ்நாடு அரசு மழை நீர் வடிக்காலுக்காக செலவிட்டதாக கூறப்படும் ரூ.4,500 கோடி எங்கே என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, தென்மாவட்டங்களில் மிக மிக அதிகனமழை பெய்யும் என டிச.12ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததாக கூறிய நிர்மலா சீதாராமன், மழை வெள்ள நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க | தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News