பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - அதிமுக ஜெயவர்தன்
தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் 7 ஆயிரம் சாக்லெட் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து பூசணிக்காய் சுற்றி, ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் தொகுதியில் நான்காம் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சோழிங்கநல்லூரில் சென்னை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் யோபு ஞானபிரகாசம் ஏற்பாட்டில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஜெயவர்தன் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அதிமுக வேட்பாளர் ஜெயவரதனுக்கு 7000 சாக்லெட் ஒன்றிணைந்த மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். அதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, பூசணிக்காய் உடைத்து, ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பெண்கள் இருபுறமும் வரிசையாக நின்று மலர் தூவியும் உற்சாக வரவேற்பளித்ததை கண்டு வேட்பாளர் ஜெயவர்தன் மகிழ்ச்சியில் வியப்படைந்தார்.
தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் செல்லும் இடமெல்லாம் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்: இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசியதால் தென் சென்னை தொகுதி முழுவதும் தற்போது கடை நீரை குடிநீரகம் திட்டம் செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் காலத்தில் மக்கள் தொகையின் அளவை கணக்கிட்டு 15 வருடத்திற்கு பின்னர் குடிநீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக பேரூர் பகுதியில் 4500 கோடி ரூபாயில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுமக்களுக்கு குடிநீர் தேவை குறித்து கொஞ்சம் கூட அக்கறையில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் அமைக்கப்படவில்லை என்று சொன்னால் மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்படும். பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து வருடமாக குடிநீர் பற்றி பேசாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தான். மக்களைப் பற்றி கவலைப்படாத, தொகுதி மக்களை திரும்பி பார்க்காத 5 வருடத்தில் சும்மாவே இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர். வீட்டிலேயே முடங்கி இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது. பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, ஊடகங்களில் கூட கூட்டம் இல்லை என்று சொன்னார்கள். அடிப்படையாக ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் பூத் அளவில் ஆட்கள் இருக்க வேண்டும், பாஜகவில் பூத் அளவில் ஆட்கள் இல்லை, மக்களும் இந்த கட்சியை பற்றி பேசவில்லை. இதனால் எந்த வித தாக்கத்தையும் பாஜக ஏற்படுத்தாது.
நான் மருத்துவராக இருப்பதால் யார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ஒரு ஆணவத்தின் உச்சியில் கால் மேல் கால் போட்டு மக்களை அணுகுவது ஒரு அநாகரிகமான செயல். மக்கள் தான் இங்கு இறுதி எஜமானர்கள், மக்கள் முடிவு செய்ததால் தான் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனீர்கள். மக்களை அணுகும் போது ஒரு பணிவு இருக்க வேண்டும், எந்த ஒரு பணிவும் இல்லாமல் தொகுதிக்கு, 5 வருடத்தில் எந்த ஒரு நல்லதும் செய்யாமல், ஆனால் ஆணவத்தின் உச்சியில் இருக்கக்கூடிய நம்முடைய தொகுதி சார்ந்த ஒரு நபராக, உரிமைகளை விட்டுக் கொடுத்து இருக்கக்கூடிய ஒரு நபராக இருக்கிறார். தொகுதி சேர்ந்த உரிமைகளை விட்டு கொடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். பேரறிஞர் அண்ணா அவர்கள் உறுப்பினராக இருந்த தொகுதியில் உரிமைகள் விட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் குற்றம்சாட்டினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ