பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.


இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ,பிரதமர் மோடி சீன பிரதமர் ஜின்பிங்கின் வருகையை வரவேற்று ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டு உள்ளேன். இந்திய பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என எனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார்.


இதன் மூலமாக தொழில் முதலீடுகள் ஈர்க்க கூடுமா என்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நீண்ட அறிக்கை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆகவே அதை பற்றி இப்போது பேசத் தேவையில்லை என்றார். மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றார்.