தூத்துக்குடி துறைமுகம் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 17, 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வ உ சி துறைமுக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வருகை தருகிறார். அங்கிருந்து கார் மூலம்  விழா நடைபெற்ற மேடைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!


அங்கு வெளி துறைமுக விரிவாக்க பணி, குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்,  கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் திட்டத்தையும் வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் – ஆரல்வாய்மொழி பிரிவு உட்பட இரட்டை ரயில்பாதை திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.  சுமார் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரட்டைப் பாதைத் திட்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்களின் பயண நேரத்தை குறைக்க உதவும்.


சுமார் ரூ.4,586 கோடி செலவில் தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தர்மபுரி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் இருவழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்- தஞ்சாவூர் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவிற்காக தூத்துக்குடியில் 3000 போலீசார் பாதுகாப்பணியிலும் 15 படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு படை  கடல் பகுதியில் கண்காணிப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூறைமுக பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பிறகு மாலையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செட்டிஹர்.  கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தனர்.  அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக மதுரை பசுமலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்கினார்.


மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ