மோடி தான் அடுத்த பிரதமர் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுறை உறுதியளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அதிமுக-வின் ஓபிஎஸ், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கையில்., 


வாரணாசியில் மிக எழுச்சியாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தை பார்க்கின்ற போது நரேந்திர மோடிக்கு இணையான ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. மீண்டும் அவரே பிரதமராக வருவார் என்பது உறுதியாக தெரிகிறது என தம்பிதுரை தெரிவித்தார்.


மேலும், இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவரை விட ஒரு நல்ல தலைவர் இல்லை எனும் நிலை தற்போது இந்தியாவில் உருவாகியிருப்பதாகவும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில் மூன்று MLA-க்கள் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு தம்பிதுரை பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.