PMK Dharmapuri Candidate Changed, Soumya Anbumani: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த வகையில், 9 வேட்பாளர்களை பாமக இன்று காலையில் அறிவித்தது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் என்பவரை வேட்பாளராக பாமக அறிவித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


சௌமியா ராமதாஸ்


இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார். பாமக சார்பில் கடலூர் தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், அவரது மனைவி மக்களவையில் போட்டியிடுகிறார். 


மேலும் படிக்க | திமுக vs அதிமுக vs பாஜக... நேரடியாக மோதும் 'இந்த' தொகுதிகள் - வெற்றி வாய்ப்பு யாருக்கு?


சௌமியா அன்புமணி கல்வித் தகுதி


சௌமியா அன்புமணி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் ஆய்வுப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் ஸ்டடிஸின் முன்னாள் மாணவி எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் 2005ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் தலைவராக நீடித்து வருகிறார். இவர் ஆவணப்படம் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளார்.


தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி...


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் பாஜக 19 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், அதன் கூட்டணியில் உள்ள வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த நால்வர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 23 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது. 


தொடர்ந்து, பாமகவுக்கு 10 தொகுதிகள், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள், அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்.


மேலும் படிக்க | வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ