பாமக நிர்வாகி படுகொலை! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
செங்கல்பட்டில் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை; குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் போராட்டம்.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மகான் சந்து பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் என்கிற பூக்கடை நாகராஜ்(45) பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு அருகே பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார், மேலும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் செங்கல்பட்டு மணி கூண்டு அருகே உள்ள தனது பூக்கடையை மூடி விட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஏழு பேர் கொண்ட கும்பலால் பூக்கடை நாகராஜ் என்பவரை சரமாரியாக அறிவாளன் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் பூக்கடை நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நகர போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது பூக்கடை நாகராஜன் உறவினர்கள் உடலை வைத்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக இச்சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின் போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வேபாதை அருகே சந்தேக நபர் செல்வதாக, அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல் துறை துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர்.
இதனால் நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், பலத்த காயமில்லை என காவல்துறை அறிந்து அவரை உள் நோயாளியாக அனுமதித்து காவல்துறையின் பலத்த காவல் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன் சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு குற்றவாளி செங்கல்பட்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தினை வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ். பி. உள்ளிட்டோர் கொலை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு , அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளி காவல்துறை சுட்டு பிடித்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பத்திரப்பதிவில் சேவை கட்டணம் உயர்வு... ஜூலை 10 முதல் அமல் - மாற்றங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ