சேலத்தில் அரசு விழாவில் தமிழக முதலமைச்சரை பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழ்ந்து தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு தமிழக முதல்வரை  பாமக உறுப்பினர்கள் புரிந்து கொண்டுள்ளனர் என அமைச்சர் நேரு பாராட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) இன்று சேலம் வந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அமைச்சர்கள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


விழாவின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்புரை நிகழ்த்தியதும் பா.ம.க மேற்க்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் வாழ்த்துரை வழங்கினார். அப்போது தமிழக முதலமைச்சர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தால் கூட அதற்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர் என்றும் தேனிக்கள் போல சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர் என்றும் பசுமைநாயகன் பனைமரத்து காவலன் என புகழாரம் சூட்டினார்.


சென்னையில் தெருத்தெருவாக சுற்றி மழை நீரால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அவர் எடுத்த நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது என்றும் எத்தனை முதல்வர்கள் வந்தாலும் இந்த முதல்வரை போல் யாராலும் பணியாற்ற முடியாது என்றும் தெரிவித்து தனது பாராட்டு மழையை அவர் நிறைவு செய்தார்.


இதனை தொடர்ந்து பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதலமைச்சர் மிகவும் எளிமையாகவும் திறமையாகவும் பணியாற்றுவதாகம்
 முதல்வரை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் தனியாக சென்ற போது உடனடியாக அழைத்து  கோரிக்கைகளை கேட்டதாகவும் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டபோது உடனடியாக வாருங்கள் என்று தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற முதல்வரை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார். முதல்வர் எளிமையாக செயல்படக்கூடியவர், மக்களின் எண்ணங்களை அறிந்து பணியாற்ற கூடியவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


ALSO READ | ரஜினி பிறந்தநாளில், ரசிகர்கள் திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு 


தான் வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அமைச்சரை மேட்டூருக்கு அனுப்பி மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் விடுவதற்கான் நடவடிக்கை எடுத்தது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாகவும்


 பா.ம.க சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்றும் தெரிவித்தது தமிழக முதல்வரை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.


இதனைத்தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கே என் நேரு, அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று பேசியதோடு  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரைப் பற்றி புரிந்து கொண்டதை விட பா.ம.க சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சரை அதிகளவில் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் இந்த விழாவில் அவர்கள் பேசியது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும் கூறி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்.


சட்டமன்ற தேர்தலில் திமுகவும் பாமகவும் எதிரும் புதிருமாக இருந்த போதிலும், பாமக பாறை மீது விழும் மழைத்துளி போன்று சலனமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாகவே பொதுமேடையில் பாராட்டுவது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையே வியப்பை ஏற்படுத்தினாலும் இது அதிமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் பாமக (PMK) தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பா.ம.க சட்ட மன்ற உறுப்பினர்களின் இந்த வெளிப்படையான திமுக ஆதரவு பேச்சு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணிக்கான அடித்தளம் ஆகிவிடுமோ என்ற எண்ணமும் எழாமலில்லை.


எது எப்படியோ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் காமெடி தான் இதற்கும் பொருந்தும் என்பது நிதர்சனமான உண்மை!!


ALSO READ | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR