பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு!

மதுரையில் பட்டப்பகலில் பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.   

Written by - ZEE Bureau | Last Updated : Nov 17, 2021, 08:29 AM IST
பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு!

மதுரை மேல அனுப்பானடி ராஜமான் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி செல்வம்.  பாமக கட்சியை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  மேலும் வக்கீலாகவும் செயல்படுகிறார்.  நேற்று காலை மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.  வீட்டில் அவரது மனைவி அவரின் மூன்று வயது குழந்தை மற்றும் உறவினர் ஒருவர் இருந்துள்ளனர். 

ALSO READ தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சூர்யா சாருக்கு நல்லவே தெரியும்: குஷ்பு பளிச்

இந்நிலையில் காலை 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்து அவரைப் பற்றி விசாரித்து அவர் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் கிளம்பியுள்ளனர்.  சிறிது நேரம் கழித்து யாரும் எதிர்பார்க்காத விதமாக மாரி செல்வமின் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றனர்.  இந்த நாட்டு வெடிவெடியால் மாரி செல்வமின் வீட்டு சுவர் சேதமடைந்துள்ளது.  மேலும் அவர் வைத்திருந்த கோழிக்கூண்டு சிதறியது.  வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால் அவரது உறவினர் சேகர் பலத்த காயம் அடைந்தார். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  அதில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மாரிச்செல்வம் தெப்பகுளம் பகுதியிலுள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்.  அந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மாரிச்செல்வம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த சம்பவங்களை தெரிந்துகொண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மாரி இடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்திற்கும் தற்போது நடந்துள்ள வெடிகுண்டு வீச்சிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்ட போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்து சென்றது பதிவாகியுள்ளது.  அவர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

ALSO READ பெண்வேடமிட்டு மிளகாய் பொடியை தூவி தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News