சென்னை: போலந்திலிருந்து, சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு வந்த ஒரு பார்சலை விமானத்துறை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பார்சலில் உயிரினங்கள் ஏதேனும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் இந்த பார்சல் தடுத்து நிறுத்தப்பட்டது. போலந்து நாட்டில் இருந்து அருப்புகோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாரிகளின் கூற்றுப்படி, பார்சலில் 107 பிளாஸ்டிக் குப்பிகளைக் கொண்ட ஒரு தெர்மோகோல் பெட்டி இருந்தது, அவை வெள்ளி படலம் மற்றும் பருத்தி துணியால் மூடப்பட்டிருந்தன. அந்த குப்பிகளில் ஒவ்வொன்றிலும் உயிருள்ள சிலந்திகள் இருந்தன.



பரிசோதனையின் அடிப்படையில், இந்த சிலந்திகள் CITES என்று பட்டியலிடப்பட்ட டரான்டுலாக்கள் (Tarantulas (spiders with hairy legs and bodies)) என்று அறியப்பட்டன. அவை தெற்கு, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்டவை என்று வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் (Wild Life Crime Control Bureau) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India) அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சிலந்திகள் ஃபோனோபெல்மா மற்றும் பிராச்சிபெல்மா இனத்தைச் சேர்ந்தவை என்று சந்தேகிக்கப்பட்டன.


Also Read | Martial Arts: சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்


CITES காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான உயிரினங்களில் சர்வதேச வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் (Zoological Survey of India) என்பது, அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள்ளின் சர்வதேச வர்த்தகம் மற்றும் அவற்றின் உயிர்வாழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் உருவானது.


இதுபோன்ற உயிரினங்களின் இறக்குமதி சட்டவிரோதமானது. எனவே, முழு பார்சலையும் மீண்டும் போலந்துக்கே அனுப்பலாம் என உயரதிகாரிகள் தெரிவித்தனர். அனுப்ப பரிந்துரைத்தனர். சுங்க சட்டம் 1962 (Customs Act 1962 read with FT (D&R) Act) இன் கீழ் பார்சலில் இருந்த சிலந்திகள் கைப்பற்றப்பட்டன. சிலந்திகள் அடங்கிய பார்சலை மீண்டும் போலந்துக்கே திருபி அனுப்புவதற்காக, அவை அஞ்சல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


உலகின் மிகப்பெரிய சிலந்திகள் என்று அஞ்சப்பட்டாலும், டரான்டுலாஸ் (இதில் 850 இனங்கள் உள்ளன) செல்லப்பிராணிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. டரான்டுலாக்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன, ஏனெனில் அவற்றின் விஷம் ஒரு தேனீக்களின் விஷத்தை விட வீரியம் குறைந்தது. இந்த சிலந்திகள் கடித்தால் வலி அதிகமாக இருக்கும், ஆனால் மனிதர்களுக்கு தீங்கு ஏதும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.


Also Read | ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR