ECR சொகுசு பங்களா நகை & பணம் திருட்டு விவகாரத்தில் போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கை!
Arrested For Theft: வைர நகைகள் மற்றும் பணத்தை திருடியவர்களை விமானத்தில் சென்று நீலாங்கரை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்
ஈசிஆர் சொகுசு பங்களாவில் வைர நகைகள் மற்றும் பணத்தை திருடிய ஓட்டுநர் உள்ளிட்ட நேப்பாளத்தை சேர்ந்த 4 பேரை மாநிலம் கடந்து விமானத்தில் சென்று நீலாங்கரை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச் சாலையில் உள்ள பிரஜேஷ் குமார் குகாத்தியா என்பவரின் சொகுசு வீட்டில் ஆள் இல்லாதபோது கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
கடந்த 29 ம் அன்று நள்ளிரவு நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் பிரஜேஷ் குமார் மனைவியின் சகோதரர் அமித்குமார் மறுநாள் 30.01.2024. அன்று ஜெ-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அதன் பின்னர் நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையில் தனிப்படை உள்ளிட்ட 10 தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக கொள்ளை நடைபெற்ற வீட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக பணிபுரிந்து வந்த நேப்பாளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு ஆர்வமுடன் கோரிக்கைகளை அனுப்பும் மக்கள்!
பின்னர் பிரகாஷின் கூட்டாளிகளும் நேப்பாளத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையிலான தனிப்படையினர் டெல்லி, மும்பை, லக்னோ, பூனே, ஜார்கண்ட், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற தனிப்படையினர் வெவ்வேறு இடங்களில் இருந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை சாதுரியமாக கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பிரகாஷ் அவ்வப்போது ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் காரில் பயணிக்கும்போது வீட்டின் உரிமையாளர் செல்போனில் பேசும்போது ஜெர்மனிக்கு குடும்பத்துடன் சென்று திரும்பி வர சுமார் 15 நாட்கள் ஆகும் என கூறுவதை நோட்டமிட்ட ஓட்டுநர் பிரகாஷ் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் தொழில் சம்பந்தமாக ஜெர்மனி சென்றதும் நேப்பாளத்தை சேர்ந்த சவுது என்பவரை தொடர்பு கொண்டு சென்னையில் ஒரு பெரிய வீடு உள்ளது வீட்டின் உரிமையாளர் தற்பொழுது ஜெர்மனி சென்றுள்ளார் அவர் வருவதற்குள் வீட்டில் புகுந்து கொள்ளையடித்து விடலாம் பல கோடி உள்ளது என்று கூற சவுதும் அவரது கூட்டாளிகளை ஒன்றிணைத்து சென்னைக்கு வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேறியுள்ளளனர்.
பின்னர் வீட்டில் கொள்ளையடித்த சுமார் 17.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம், வைடூரியம் என சுமார் மூன்று கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு பங்கு கூட பிரிக்காமல் அவர் அவர் தனி தனியே தலைமறைவாக இருந்து வந்துள்ளவர்களை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான நேப்பாளத்தை சேர்ந்த சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரகாஷ் காத்கா(32), ஜெனத் பிரசாத் ஜெய்சீல்(40), லலித்குமார்(28) மனோஜ் மாசி(எ)சவுது(45) ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு கட்டத்தில் நீலாங்கரை உதவி ஆணையாளர் பரத் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடுத்த மூன்றே நாட்களில் விமானத்தில் பறந்து சென்று கைது செய்து தமிழக காவல்துறை யாருக்கும் சலிச்சவர்கள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளுடன் டெல்லி சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல திட்டம் தீட்டினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் மனோஜ் மாசி மற்றும் ஜனத் பிரசாத் ஜெய்சிலுக்கு பெங்களுரூ மற்றும் தானே நகரங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
நேப்பாளத்தை சேர்ந்த கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை காட்டி அவர்களின் உருவம் உள்ளிட்ட தடயங்கள் முழுமையாக கிடைத்ததும் இதுவரை நேப்பாளத்தை சேர்ந்த ஒருவரை கூட கைது செய்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி தப்பி சென்ற நேப்பாளத்தை கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடம் 90% கொள்ளை போனவற்றை பறிமுதல் செய்து நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையிலான தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
பின்னர் கைதான நான்கு பெரும் நீதிமன்ற மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.எப்பொழுது இந்தியாவிற்கு வந்தாலும் ஒரு கோடி இல்லாமல் நேப்பாளம் திரும்பமாட்டோம் என்ற அதிர்ச்சி தகவல்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது போலீசாரை அதிரவைத்துள்ளது.
அதேபோல் இவர்கள் திருட்டு சம்மந்தமாக பேசுவதற்கு தனி ஒரு ஆப் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | கமல்ஹாசன் கோவையில் போட்டியா? வானதி சீனிவாசன் குடுத்த ரியாக்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ