திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு ஆர்வமுடன் கோரிக்கைகளை அனுப்பும் மக்கள்!

DMK Election Manifesto Panel:

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2024, 01:27 PM IST
  • தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி மும்முர
  • இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்
  • திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு முகாம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு ஆர்வமுடன் கோரிக்கைகளை அனுப்பும் மக்கள்! title=

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைக் குழு, பிப்ரவரி 5 திங்கள் முதல் பிப்ரவரி 23 வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறது.  2024 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன், பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணம், இம்மாதம் 23ம் தேதி வரை நடைபெறும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, ஜனவரி 18 ஆம் தேதி அமைக்கப்பட்டது. 

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கோரிக்கைகளை அனுப்பலாம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்ற தலைப்பில் பரிந்துரைகளை அனுப்புவதற்கு பிப்ரவரி 3 ஆம் தேதி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!

தேர்தல் அறிக்கை வடிவமைப்பு

தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதற்கான கோரிக்கைகளை அனுப்பி வைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்கள் பங்களிக்கும் வகையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல் முகவரி அளிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் மூலம் பகிர்வதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்காக #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] ட்வீட் செய்வது அல்லது பேஸ்புக் பக்கத்துல் - DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அளிக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் (05.02.24) குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கருத்துகளை நேரில் பெறுகின்றனர்.

ஆர்வமுடன் கோரிக்கைகளை அனுப்பும் மக்கள்

இதுவரை எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை மக்கள் ஆர்வமாக அனுப்பி வருகின்றனர். தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடப்படவுள்ளது.

மேலும் படிக்க | Liquor Price Hike : டாஸ்மாக்கில் எந்த சரக்குக்கு என்ன விலை? விலை உயர்வால் தள்ளாடும் ’குடிமக்கள்’!

கோரிக்கை மனுக்கள் பெறும் பணி தொடக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று (05/01/2024) முதல் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கியுள்ளனர். 

திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் வைத்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்கள்.

திமுகவின் தூத்துக்குடி வடக்கு & தெற்கு, விருதுநகர் வடக்கு & தெற்கு, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்களை அளிக்கின்றனர். 

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விருதுநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் தங்கம் தென்னரசு, இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் அறிக்கைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு தங்கள் மாவட்டத்திற்குரிய வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து வந்து திமுக தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவினரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கின்றனர்.

மேலும் படிக்க | நாட்டிலேயே குறைந்த விலையில் ’சரக்கு’ கிடைக்கும் மாநிலம் எது? தெரிஞ்சா ஆச்சரியம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News