நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அபராத கட்டண தொகையை கண்டித்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அபராத கட்டண தொகையை கண்டித்தும், தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனைமீறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 


அங்கு ஏராளமான மாணவர்கள் குவிந்ததால், பேச்சுவாரத்தை நடத்தும்படி கூறினர். ஆனால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவித்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என மாணவர் சங்கம் பிரதிநிதிகள் கூறியதால், கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். 


அதன் பிறகு மாணவ பிரதிநிதிகளை பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வெளியே இருந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.


இந்த தடியடி சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியது,


"மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.