கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் கடந்த இரண்டாம் தேதி  சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது Instagram  பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை! என்ன அம்சங்கள் இடம் பெரும்?


இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையின்  பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம்பி.  கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 


சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார். தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  சர்மிளா கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது, பின்னர்  வதந்தியாகவே இருந்தது.  


மேலும் படிக்க | அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கேஎஸ் அழகிரி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ