திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் மோசஸ் என்பவருக்கு சொந்தமான பயோடீசல் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி மூலம் தயாரிக்கப்படும் பயோடீசல் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பல வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் திருநெல்வேலியில் இந்த கம்பெனியின் 2 வாகனங்களை கலப்படம் கலந்திருப்பதாக குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் இந்த நிறுவனத்தில்குடிமை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


ALSO READ | கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து


தற்போது இந்த சம்பவம் தொடர்பாக குடிமைப்பொருள் போலீசார் கூறியதாவது., திண்டுக்கல்  மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை பகுதியில் கலப்பட டீசல் மற்றும் பயோடீசல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது விவகாரம் தொடர்பாக தகவல் வந்ததை அடுத்து மோசஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டிஎஸ்பி சோமசுந்தரம்  தலைமையில் எஸ்.பி. தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகிறோம். 


இங்கு கலப்பட பெட்ரோல் தயாரிக்கப்படுகிறதா, இல்லை வாங்கி விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது .இந்த சோதனை அறிக்கையை உடனே சொல்ல முடியாது. ஆயில் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சோதனை செய்து அறிக்கை வந்த பின்புதான்  எதையும் அறிவிக்க முடியும் என்று கூறினார்.


ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR