தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது.  பொதுவாக எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் தான் காவலராக பணியமர முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | காணாமல் போன 15 வயது சிறுமி சாக்குப்பையில் சடலமாக கண்டெடுப்பு!


தற்போது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழை சரிபார்க்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  மேலும் வழக்கமாக உளவு பிரிவு போலீசார் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் சரியாக உள்ளதா, குறிப்பிட்ட முகவரியில் தான் வசிக்கிறாரா என்றும் அவரின் ஜாதி, வேறு ஏதும் குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து அந்த அறிக்கையை சமர்ப்பிப்பர்.



ஆனால் இம்முறை கூடுதலாக காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபரின் சமூக வலைதள பக்கங்களும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது.  அதன்படி தேர்ச்சி பெற்ற நபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எதுவும் பதிவிட்டுள்ளாரா, தனியாக குழு எதுவும் தொடங்கி தேவையில்லாத செய்திகளை பரப்பி வருகிறாரா, ஜாதி மற்றும் மத ரீதியான பதிவுகளை எதுவும் பதிவிட்டுள்ளாரா அல்லது சர்ச்சைக்குரிய குழுக்களை எதுவும் பின்தொடர்கிறாரா என்பதையும் உளவு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


ALSO READ | சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR