மத அடிப்படையில் வெறுப்பு பேச்சு : பா.ஜ.க விஜோஜ் மீது வழக்கு
டிவிட்டரில் மதம் சார்ந்த சில போலியான கருத்துக்களை பதிவிட்டதாக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிவிட்டரில் (Twitter) பகைமையை வளர்க்கும் விதமாக மதம் சார்ந்த சில போலியான கருத்துக்களை பதிவிட்டதாக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.
ALSO READ | செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி
அதில், சென்னை கீழ்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரகத்தில் (Chennai Police) அளித்த புகாரில், வினோஜ் P.செல்வம் என்பவர் தன்னுடைய டுவிட்டர் ஹேண்டிலில் பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும், அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதால், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலும் அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலும், பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
ALSO READ | உண்ணாவிரத போராட்டத்தின் இடையே பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR