தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த எம்.லாவண்யா என்ற 17 வயது சிறுமி, தொடர்ந்து பள்ளியில் படிக்க வேண்டும் என்றால், கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் தமிழ்நாட்டில் அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"லாவண்யா தந்தை , தாய் கொடுத்த வாக்குமூலத்தில் தற்கொலைக்கு தூண்டப்பட காரணம் , கட்டாயப்படுத்தி மதம் மாறுமாறு தூண்டியுள்ளனர் என்பதே. நேர்மையான , சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த போராட்டம் ஆரம்பம்தான் , அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், மாவட்டம் தோறும் போராட்டம் நடைபெறும். மேலும் ஒரு குழந்தை பாதிக்காமல் இருக்க, லாவண்யா மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்.
ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!
லாவண்யாவின் வாக்குமூல வீடியோ பொய் என்பதற்கு ஆதாரமில்லை , அந்த வீடியோவில் லாவண்யா கூறியுள்ள அதே விசயத்தைதான் அவரது பெற்றோரும் சொல்லியுள்ளனர்.
சிபிஐ அமைப்பு சுதந்திரமான விசாரணை நடத்தி முழு உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இருக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில்தான் புகைப்படங்களை பயன்படுத்த கூடாது. லாவண்யாவிற்கு நடந்தது பாலியல் துன்புறுத்தல் சம்பவம் கிடையாது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என்பதுதான் பாஜகவின் மரபு. என்றாலும் நியாயம் கிடைக்காது என்று தெரிந்த பிறகே லாவண்யாவின் வாக்குமூல வீடியோ மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம் ".
ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR