தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இந்நிலையில், முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கடந்த 10.10.2019 அன்று இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


அப்போது, அக்கோயிலில் ஒரு சிறுமி தனது பள்ளி காதலருடன் இருந்துள்ளார்.  அப்போது அவர்களிடம் சென்று பேசிய சசிகுமார், அச்சிறுமி மற்றும், அவருடைய காதலனை மிரட்டி நிற்கவைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.


மேலும், பெற்றோர்களுக்கும் அவர்களின் ஊர் மக்களுக்கும் அந்த புகைப்படத்தை அனுப்ப போவதாக கூறி இருவரையும் மிரட்டியுள்ளார் சசிகுமார்.


மேலும் படிக்க | EPFO for NRI: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி, எக்கச்சக்க பயன்கள்


இதையடுத்து அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்காமல் இருப்பதற்கு லஞ்சமாக ரூ.5,000/-  பணத்தை கொண்டு வர வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார் சசிகுமார். பின்னர் பேசி  சிறுமியின் காதலனை அவரது நண்பர்களிடம் சென்று பணத்தை வாங்கி வருமாறு ஊருக்குள் அனுப்பியுள்ளார். 


இந்நிலையில், தனிமையில் இருந்த அச்சிறுமியிடம் அத்து மீறி சசிகுமார் நடந்துக்கொண்டதாக தெரிகிறது. மேலும், அவர் பாலியல் ரீதியாக அச்சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது. 


விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து, ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல் புரிந்துள்ள காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ