பெரிய பாண்டியன் ஒரு உண்மையான ஹீரோ: விஷால்
நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானில் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில்,
கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கிறார். அவர் ஒரு உண்மையான ஹீரோ. அவர் மக்களை பாதுக்காக்கும் பணிக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார்.
அவரது துணிவுக்காக அவரை நான் வணங்குகிறேன். அவருடைய இழப்பு தாங்கிக் கொள்ள முடியாதது மற்றும் இதற்கு காரணமான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.