பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள காவல்துறையினர் தான் உதவ வேண்டும், மாறாக ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாது என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவை காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் தலைமையில் புதுச்சேரி போக்குவரத்து காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.


கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைப்பெற்ற இந்த புத்தாக்க பயிற்சியில் பேசிய கிரண்பேடி அவர்கள் போக்குவரத்து காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் அவர்களது கடமைகள் குறித்து பேசினார்.


தொடர்ந்து பேசிய அவர் பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள காவல்துறையினர் தான் உதவ வேண்டும் மாறாக ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்தில், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்றுகொண்டிருந்த உஷா என்ற 3 மாத கர்ப்பிணி போக்குவரத்து காவல்துறை அதிகார் உதைத்ததில் கீழே விழுந்து உயிரிழந்தார். 


ஹெல்மெட் இல்லாமல் பயணித்ததால் அத்தம்பதியினரை பிடிக்கும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி காமராஜ் அவர்களை உதைத்ததாக அவர் விளக்கம் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது போக்குவரத்து காவல்துறையினருக்கு இந்த புத்தாக பயிற்சி நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தகது!