தமிழகம் முழுவதும் நாளை 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


போலியோ சொட்டு மருந்து ஆனது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்காக பஸ், ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மொத்தம் 1,652 மையங்களை தமிழக அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.


அதேசமயம் ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், பள்ளிகளில் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நிதி தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியானது. பின்னர் சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும், போலியோ தடுப்பு மருந்து வாங்குவதற்காக சர்வதேச அமைப்பிடம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 100 கோடி ரூபாய் கடன் கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பெற்றோர் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என்னும் தகவல் வெளியாகியுள்ளது!