போலியோ சொட்டு மருந்து! எங்கு சென்று போடலாம்?
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து மூலம் குழந்தைகளின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்களது உடலை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஜனவரி மாதம் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை இன்று தேனாம்பேட்டையில் தொடங்கி வைத்தார். இந்த முகாம்களில் சுமார் இரண்டு லட்சம் பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 43,000 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த முகாம்களின் மூலம் 58 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலியோ வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது. இதன் காரணமாக இதுவரை இரண்டு தடவை செலுத்தப்பட்டு வந்த டோஸ்கள் தற்போது ஒரு தடவை மட்டுமே செலுத்தப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து போடப்படும் முகாம்களில் பிற மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படும், இந்த நாட்களில் சொட்டு மருந்து பெறாத குழந்தைகளுக்கும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், பால்வாடிகள் மற்றும் சில முக்கியமான இடங்களில் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்துகள், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி பணியால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR