பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Election Latest News: 18 வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி ஆரம்பமானது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், அனைத்து தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அந்த தொகுதியில் போட்டியிட மொத்தம் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. இதில் சில முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அரசியல் கட்சிக்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அதாவது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையானது இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - தேர்தல் களம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு.. மொத்தம் எத்தனை?
யாருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது?
சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதி வேட்புமனு நிறுத்தி வைப்பு. இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குரிமை உள்ளதால் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைப்பு, உரிய விளக்கத்திற்கு பின் ஏற்கப்படும் எனத்தகவல்.
வடசென்னை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் மனோ அவர்களின் மனு அப்ஜக்ஷன் காரணமாக பரிசீலனையில் உள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மனு ஏற்கபட்டு உள்ளது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயருடன் வேட்பு மனு தாக்கல் செய்த மற்ற ஒபிஎஸ் களின் வேட்புமனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு மனு ஜாதி சான்றிதழில் சில சந்தேகங்கள் உள்ளதால் நிறுத்தி வைப்பு. அதேபோல் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் வேட்புமனுவும் நிறுத்தி வைப்பு.
மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோத் செல்வத்தின் மனுவிற்கு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் வேட்பு மனு நிறுத்திவைப்பு.
மேலும் படிக்க - தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ