தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டேன், குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவோம் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அதற்கு உட்கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். தேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமை, அதற்கான கூட்டம் இதுவல்ல என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன், தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும், அது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து என தடாலடியாக பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | K Annamalai: டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை...வரிசை கட்டும் புகார்கள்: மேலிடத்தின் பிளான் என்ன?


இதனால் தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெளிப்படையாகவே பலர் பேச தொடங்கிய நிலையில், அண்ணாமலை தன்னுடைய நிலைப்பாட்டை பொதுவெளியில் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசும்போது, தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை கட்சி வளர வேண்டும் என்றால் தனித்து போட்டியிடுவது சிறந்தது. அந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார். அவர் இந்த கருத்துகளை கூறிவிட்டு அதன்பிறகு தெரிவித்த ஒரு சில வார்த்தைகள் தான் அண்ணாமலை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


அந்த பேட்டியில் அண்ணாமலை பேசும்போது, அரவக்குறிச்சி தேர்தலில் காவல்துறையில் சிறுக சிறுக சேமித்த பணத்தை செலவு செய்துவிட்டேன். இப்போது கடனாளியாக இருக்கிறேன். ஒரு காரியகர்த்தாவாக கட்சியில் இருப்பேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். மாநில தலைவராக இருக்கும் அவர் திடீரென இப்படி ஏன் பேசினார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கும்போது, தேசிய தலைமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுப்பில் இருக்கிறதாம். அவருடைய செயல்பாடுகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அண்ணாமலையில் எதிர்கோஷ்டியினர் ரிப்போர்ட் அடிக்க, அது வொர்அவுட்டாகியுள்ளது. இது அண்ணாமலைக்கும் தெரியவர, எப்போது வேண்டுமானாலும் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற எண்ணத்துக்கு அவர் வந்துவிட்டாராம். இதனடிப்படையிலேயே அண்ணாமலையின் பேட்டியும் இருந்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரம். 


மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்த எச் ராஜா! வலுக்கும் போர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ