Pongal Special Trains: பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்காக தெற்கு ரயில்வே, சிறப்பு ரயில் சேவையை வழங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொங்கல் திருநாளுக்காக, சென்னை - நாகர்கோவில், சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில், சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்பட உள்ளன. 


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தி இருந்து, நாகர் கோவில் செல்லும் சிறப்பு ரயில்கள் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், இரவு 10.30 மணிக்கு புறப்படும் என்றும் அந்த ரயில் நகர்கோவிலை மறு நாள் காலை 11.10 மணிக்கு சென்றடையும் எனவும் ரயில்வே கூறியுள்ளது.


ALSO READ | அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் அளிக்கப்படும்: தமிழக அரசு


அதே போல்  நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 16 மற்றும் 17ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை (Chennai) எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, மறு நாள் அதிகாலை 3.40  மணிக்கு சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.



சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தி இருந்து, கோவைக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் ஜனவரி 13 ம் தேதி, இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்றும் அந்த ரயில் கோவையை மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடையும் எனவும் ரயில்வே கூறியுள்ளது.


அதே போல்  கோவை ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 17ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, மறு நாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.


இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


ALSO READ | ஜனவரியில் 14 நாட்கள் Banks வேலை செய்யாது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR