தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் அந்த பொங்கல் பரிசு தொகுப்பு யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற அறிவிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது.


மேலும் படிக்க | Pongal Parisu 2024: அடித்தது ஜாக்பாட்... பொங்கல் பரிசுடன் ரொக்கமும்... உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!


வேட்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் 


இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துவிட்டதாக தெரிவித்திருக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் பணம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக உரிய நர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 


யாருக்கெல்லாம் கிடைக்காது?


தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதில் சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாது. 


கலைஞர் உரிமைத் தொகை


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் அதேவேளையில் கலைஞர் உரிமைத் தொகையும் முன்கூட்டியே பயனாளர்களுக்கு கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்படும் இந்த தொகை இம்மாதம் ஜனவரி 10 ஆம் தேதி உரிய மகளிருக்கு கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ