பொன்முடி வழக்கில் தீர்ப்பு... காலியான திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல் எப்போது?
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான அரசின் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார். அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம், அதனை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக ஆறுமாதம் சிறை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு காலவகாசம் கொடுக்கப்பட்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்வதற்கான சட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உறுதி? 2வது வழக்காக இன்று தீர்ப்பு!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்எல்ஏ அல்லது எம்பி ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட உடன் அவர்கள் தங்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்து தகுதியிழக்கின்றனர். அந்தவகையில் பொன்முடியும் தானாகவே எம்எஏ பொறுப்பில் தகுதியிழப்பாகியிருக்கிறார். அதனால் அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்படும். பொன்முடி வழக்கின் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு தீர்ப்பின் நகலின் அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி முறைப்படி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
அதேநேரத்தில் பொன்முடி உடனடியாக மேல்முறையீடு செய்ய இருப்பதால் அவரின் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடி இந்த வழக்கில் விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என முறையிட வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தால் மட்டுமே அவர் எம்எல்ஏவாக தொடர முடியும். இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால் உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் பொன்முடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | யார் இந்த பொன்முடி? பகுதிநேர பேராசியர் டூ அமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ