தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கினர். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறதும் காற்று மாசு. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அனைத்து இடங்களிலும் 100-ஐ தாண்டியுள்ளது காற்று மாசு தரக் குறியீடு. நேற்று காலை ஒரு சில இடங்களில் மட்டுமே 100-ஐ தாண்டி பதிவாகி இருந்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போதே மிதமான மாசு என்ற நிலைக்கு சென்றிருந்தது காற்றின் தரம். இதன் காரணமாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படலாம்.  இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் இன்று அந்த நிலை மிகவும் மோசமானது. கும்மிடிப் பூண்டியில் காற்று மாசு தரக்குறியீடு 200 புள்ளிகளைக் கடந்திருக்கிறது. பெருங்குடியில் 178 ஆக உயர்ந்திருக்கிறது. 


மேலும் படிக்க | தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி - குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா - தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?


நேற்று காலையில் காற்று தரக் குறியீடு 


அரும்பாக்கம் - 134, கொடுங்கையூர் - 112, மணலி - 109, பெருங்குடி  - 169, ராயபுரம் - 121, 


இன்று காலை காற்று தரக் குறியீடு 


பெருங்குடியில் 178, அரும்பாக்கத்தில் 159, ராயபுரத்தில் 115, கொடுங்கையூரில் 112, மணலி 152, ஆலந்தூர் 102, வேளச்சேரி 117 என அதிகரித்திருக்கிறது.


இதைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 231 என்ற அளவில் மோசமடைந்துள்ளது. வேலூரில் 122, கடலூரில் 155, சேலம் 122, புதுச்சேரியில் 147 என்ற அளவில் காற்றின் தரம் குறைந்து பதிவாகி உள்ளது.


மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ