இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் இன்னும் மக்களை விட்டொழியாத நிலையில், கேரளாவில் புது வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. தக்காளி வைரஸ் எனப்படும் அந்த வைரஸால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பது முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அசானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பெருமழை: நிபுணர்கள் எச்சரிக்கை


கொல்லம் மாவட்டத்தில் இந்த வைரஸின் பரவல் அதிகம் உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் அம்மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காய்ச்சல் தமிழகத்துக்கு பரவும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், கேரளாவில் எல்லைப் பகுதி தமிழகத்துடன் தான் அதிகம் உள்ளது.


இதனையொட்டி தமிழக - கேரளா எல்லையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநில எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளிலும் இந்த கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வாளையாறு வழியாக கோவை வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ப்படுகிறது. இதன் பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.  அதேபோல், கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பெற்றோரின் கவனக்குறைவால் 4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR