கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதித்த இரத்தம் ஏற்றப்பட்ட அவலம்....
அலட்சியமாக மருத்துவமனையில் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV இரத்தம் ஏற்றப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....
அலட்சியமாக மருத்துவமனையில் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV இரத்தம் ஏற்றப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தனியார், அரசு மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 4 தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறு பரிசோதனை செய்ய விருதுநகர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், HIV தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கணவருடன் சென்று சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.