சேலத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.


இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் எல்.கே.சுதீஸ் மற்றும் இவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.