ஜனாதிபதி பயணம் தீடீர் ரத்து... காரணம் என்ன?
Droupadi Murmu Tamilnadu Visit: கோவையில் இருந்து நீலகிரி செல்ல இருந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
Droupadi Murmu Tamilnadu Visit: இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். முதல் நாளான நேற்று, காலை மதுரை வந்த குடியரசு தலைவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கோயில் சிவாச்சாரியார்கள், அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கினர். மேலும், மீனாட்சியம்மன் கோயில் சார்பாக அவருக்கு குங்குமம் பிரசாதமாக வழங்கியது. தொடரந்து, மீனாட்சியம்மன் சிலையையும் வழங்கினர்.
மேலும் படிக்க | தரிசனம் முடித்த ஜனாதிபதி... குங்குமத்துடன் வழங்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை!
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த பின், மாலையில் கோவைக்கு விமான மூலம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் ஈஷோ யோகா மையத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு சத்குரு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து, லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார். பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார். பின்னர், நடைபெற்ற ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், நேற்றிரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், அவரது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரலாக இன்று காலை 11.45 மணிக்கு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அதற்கு கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அங்கு செல்வதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த பயணமானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வுக்கு நண்பகல் 12.30 மணிக்கு மேல் அவர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ