தரிசனம் முடித்த ஜனாதிபதி... குங்குமத்துடன் வழங்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை!

President Droupadi Murmu In Madurai: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு சிவாச்சாரியர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 18, 2023, 01:45 PM IST
  • மீனாட்சி அம்மன் கோயில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்.
  • ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
  • தரிசனம் முடித்து அரசு சுற்றுலா மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார்.
தரிசனம் முடித்த ஜனாதிபதி... குங்குமத்துடன் வழங்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை! title=

President Droupadi Murmu In Madurai: தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு, விமானப்படையின் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு  வந்தார். மதுரை விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அவர் வருகை தந்தார். அங்கு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட தற்காலிக ஓய்வறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

அதன்பின்னர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கோவிலுனுள் வருகை தந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன்,  அமைச்சர் மனோ தங்கராஜ், கோவில் அறங்காவல் சார்பில் தக்கார் கருமுத்துகண்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,  ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

மேலும் படிக்க | பங்காளிகளா... நம்ம மதுரைக்கு மெட்ரோ வருது - முழு விவரம் இதோ!

பூரண கும்ப மரியாதை

இதனையடுத்து கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோயில் சார்பில் சிவாச்சாரியார்கள்  பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதலில் அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

Murmu

குங்குமத்துடன் மீனாட்சியம்மன் சிலை

இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவருக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதத்துடன் மீனாட்சியம்மன் சிலையும் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்த பின்னர் அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு கார் மூலமாக புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை செல்கிறார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் படிக்க | கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உயிரிழப்பு: போக்குவரத்து நிறுத்தம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News