தக்காளி சட்னிக்கு டாடா, இனி புதினா சட்னி தான்- நெட்டிசன்கள் கலகல
அத்தியாவசியப் பொருளான தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது
சேத்துலயும் அடிவாங்கியாச்சு.. சோத்துலயும் அடிவாங்கியச்சு என்கிற ரீதியில் தான் மக்களுடைய நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. கொரோனா அச்சத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த மக்களை கடந்த சில மாதங்களாக மழை வாட்டி வதைத்து வருகிறது. ஒழுங்கா வேலைக்கும் போக முடியாமா? வீட்டலயும் சும்மா இருக்க முடியமா? அவதிப்படுகிறார்கள். சரி, வீட்டில் தான் இருக்கிறோம், நல்லா சமைத்து சாப்பிடலாம் என்றால், தக்காளி விலை விண்ணை முட்டுகிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) மட்டும்மல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அண்டை மாநிலங்களிலும் மழை வெளுத்து வாங்குவதால், அத்தியாவசியப் பொருளான தக்காளியின் (Tomato) விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சென்னையில் (Chennai) ஒரு கிலோ தக்காளி ரூ.125 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அந்தப் பகுதியில் இருக்கும் டிமாண்டுக்கு ஏற்றார்போல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வீடுகளில் தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைக்க முடியோமோ? அந்த குழம்புகளையே வைக்கின்றனர்.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் உணவகங்களில் சொல்லவா? வேண்டும். இட்லி, தோசைகளுக்கு தக்காளி சட்னியை வைத்த ஹோட்டல் உரிமையாளர்கள் ஓவர் நைட்டில் அதற்கு டாட்டா காட்டிவிட்டனர். தக்காளி சட்னிக்கு பதிலாக தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, பொதினா சட்னிக்கு மாறிவிட்டனர். குறிப்பாக, பொதினா குறைவான விலையில் கிடைப்பதால், பெரும்பாலான ஹோட்டல்களில் புதினா சட்னியே இட்லி, தோசைக்கு கொடுக்கப்படுகிறது.
தக்காளியை பொறுத்தவரை எப்போதும், ஏழைகளின் ஆப்பிள் எனக் கூறுவார்கள். ஆனால், இப்போது விற்பனையாகும் விலைக்கு, அதானி, அம்பானி வீடுகளில் மட்டுமே தக்காளியை வைத்து குழம்பு வைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 140 ரூபாய்க்கும், திருச்செங்கோடு, ராமநாதபுரம் பகுதிகளில் 130 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 125 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தக்காளியின் விலையேற்றம் இணையத்திலும் மீம்ஸ் கன்டென்டாக மாறியுள்ளது. நெட்டிசன் ஒருவர் எழுதியுள்ள பதிவில், " இதை சொன்னா பணத்திமிருனு சொல்வாங்க, ஆனாலும் சொல்கிறேன் எங்க வீட்ல இன்னைக்கு ‘தக்காளி சட்னி’ என கூறியுள்ளார். இன்னொருவர், " தக்காளியை கம்பேர் பண்ணும்போது, ஆப்பிள் விலை குறைவா இருக்கு, அதனால இனிமேல் ஆப்பிள் குழம்பு, ஆப்பிள் ரசம், ஆப்பிள் சட்னி செஞ்சு சாப்பிட வேண்டியது தான்" எனக் கூறியிருக்கிறார்.
மற்றொரு நெட்டிசன், "' யோவ், நீ தக்காளி சட்னி வைக்கற அளவுக்கெல்லாம் சம்பாரிக்கல, புதினா சட்னி தான் செய்வேன் சாப்பிட்டு படு" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். தக்காளி விலையை கிண்டலடித்துள்ள குசும்புக்கார நெட்டிசன் ஒருவர், முனிவர் கூறுவதுபோல் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், " முன்பொரு காலத்தில் தக்காளி என்ற பழம் இருந்தது, அதில் மக்கள் சட்னி அரைத்து சாப்பிட்டனர் என்பது வரலாற்று குறிப்பில் இருக்கு" எனத் தெரிவித்துள்ளார்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR