கலாநிதி வீராச்சாமி பிரச்சாரம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனி ஆண்டவர் தெரு, திருப்பூர் குமரன் தெரு, திருவிக தெரு, கண்ணன் தெரு உள்ளிட்ட இடங்களில் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.  அவர் பரப்புரை மேற்கொள்ளும்போது திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று திராவிட மாடல் அரசின் 3 ஆண்டுகள் சாதனையை எடுத்துரைத்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார். 


மேலும் படிக்க - 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை


உதயசூரியனை காண்பித்த சிறுமி


அப்பொழுது சிறுமி ஒருவர் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு பொன்னாடை அணிவித்து உதயசூரியன் சின்னத்தை காண்பித்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கலாநிதி வீராசாமி, எங்கள் கட்சி கூட்டணி வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 4181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளோம்.


மோடி ஷோ எடுபடவில்லை


மோடி சென்ற ரோட் சோ என்பது பிளாப் சோ. இரண்டு கிலோமீட்டர் நடந்தால் வாக்குகள் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக அது கிடைக்காது. அண்ணாமலை எந்த செலவு செய்யமாட்டேன், யாருக்கும் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். ஆனால், அவரது நண்பர்கள் அவருக்கு 8 லட்சம் 10 லட்சம் என்று கொடுக்கிறார்கள். அவர் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். அதைவிட்டுட்டு ஏதாவது வார்த்தைகளை  பேச வணேடும் என சொல்லிவிட்டு செல்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதமர் மோடியும் பிளாப், அண்ணாமலையும் பிளாப் என கலாநிதி வீராச்சாமி தெரிவித்தார்.


மேலும் படிக்க - A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ