சேலம் மத்திய சிறையில் 20 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு கைதிக்கு செல்போன் வழங்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மத்திய சிறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கைதிகளிடம் செல்போன் பயன்பாடு இருப்பதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை குழுவில் இடம்பெற்றுள்ள வார்டன்கள் பிரபாகரன், பாலமுருகன், மாதேஸ்வரன், பூபதி ராஜா, கார்த்திக்,விஜய் ஆகியோர் சிறையில் உள்ள அறைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.


அப்போது டியூப்லைட் பட்டியில் செல்போன், தலை துவட்டும் துணியில் சார்ஜர் ஒயர் மற்றும் சோப்பில் சிம் கார்டு உள்ளிட்டவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் மீட்கப்பட்டது.


இது தொடர்பான விசாரணை (Police Investigation) நடத்தியதில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் சண்முகம், கார்த்தி மற்றும் விசாரணை கைதி ரவிக்குமார் ஆகியோருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. மேலும் சிறை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதில் கைதி கார்த்திகிடம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் 20 ஆயிரம் கொடுத்து செல்போனை சிறைக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.


கொலை முயற்சி வழக்கில் கைதாகி 8 மாதமாக சிறையில் இருக்கும் கார்த்தி, கோபி என்ற கைதிகள் கேட்டதால் செல்போனை உள்ளே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி சிறை அதிகாரி ராகவனிடம்  20 ஆயிரம் பணம் கொடுத்து அவர் மூலமாக  செல்போனை கைதி சண்முகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிடிப்பட்ட பின்னர் எழுத்துப்பூர்வமாக அவர் எழுதி கொடுத்துள்ளனர்.


அதிகாரியே கைதிக்கு செல்போன் கொடுத்த தகவலை உயர் அதிகாரிகள் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதையடுத்து ஜெயிலர் ராஜமோகன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில்,  சிறையில் செல்போனை மறைத்து வைத்திருந்த கைதிகள் சண்முகம், கார்த்தி, ரவிக்குமார் ஆகியோர் மீதும் தடை செய்யப்பட்ட செல்போனை கைதிக்கு கொடுத்த உதவிய சிறை அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.


இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கைதிகள் கூறுவதுபோல் செல்போனை உதவி சிறை அதிகாரிகள் (TN Police) தான் கொடுத்தார்களா என்பது குறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எப்போது எந்த நேரத்தில் செல்போன் கொடுக்கப்பட்டது? அப்போது உதவி சிறை அதிகாரி எங்கிருந்தார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


ALSO READ | முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR