கோவை  பீளமேடு பகுதியைச் சேர்ந்த 43 வயதான கல்லூரி பேராசிரியர் கடந்த மாதம் லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளத்தில் கால் கேர்ள்ஸ் சர்வீஸ் மற்றும் மசாஜ் சர்வீஸ் கிடைக்குமா என தேடியுள்ளார். அந்த  இணையதள பக்கத்தில் தனக்கு கிடைத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதே வேளையில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முன்பணம் செலுத்த வேண்டும் எனக்கூறியும்  ஒரு கும்பல் பணம் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பல இளம் பெண்களின் புகைப்படங்களை பேராசிரியருக்கு அனுப்பிய அவரது ஆசையை தூண்டி தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளனர். கிட்டதட்ட 7 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்றுள்ளனர். பணத்தை பெற்ற பின் அந்த கும்பல் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளது. அதன்பிறகு தொடர்ந்து அந்த கும்பலை தொடர்பு கொள்ள பேராசிரியர் முயன்ற போது தான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.அதன்பிறகு இது குறித்து  கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 


மேலும் படிக்க | ஆட்டோவில் பணத்தை தவறிவிட்ட வெளிநாட்டினர்..நெகிழ வைத்த இளம் ஆட்டோ ஓட்டுனரின் செயல்!


இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப  சட்டம்  ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லோகாண்டோ இணையதளத்தின் "URL" மற்றும்  வங்கிக் கணக்குகளுக்கான பணப் பரிவர்த்தனைகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் எண்கள் ஆகியவற்றை போலீஸார் சோதனை செய்தனர். அதில் மோசடி செய்தவர்கள்  கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பது தெரியவந்தது. அவர் தலைமையில் செயல்பட்ட 9 பேர் கொண்ட கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹரி பிரசாத் இப்படி பெண் ஆசையில் அலையும் நபர்களை வைத்து பணம் பார்க்க வேண்டும் என்பதற்காக, தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.



லோகாண்டோ இணையதளத்தில் ஆயுர்வேத மசாஜ் மற்றும் கால் கேர்ள் சர்வீஸ்  தமிழகம் முழுவதும் செய்யபடும் என  விளம்பரம் செய்து வந்ததுடன் , போலீசாரிடம் சிக்காமல் தவிர்க்க மும்பை, கோவா, ஹைதராபாத், பெங்களூரு என  பல்வேறு இடங்களில் தங்கள் இருப்பிடங்களை மாற்றி வந்ததும் தெரிய வந்தது. கர்நாடக  மாநிலம் பெங்களூருவில் இருந்து பேராசிரியரிடம் மோசடி செய்து பணம் பறித்தது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் பெங்களூருக்கு சென்று ஒன்பது பேரையும் கைது செய்தனர்.


எம்.ஹரி பிரசாத்,வி.மகேந்திரன், சக்திவேல்,சரவணமூர்த்தி, அருண்குமார், எம்.சக்திவேல், ஜெயபாரதி,  கே.மகேந்திரன்,கோகுல் ஆகிய 9  பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிபதி  இல்லத்தில் அஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 



பொள்ளாச்சியைச் சேர்ந்த நபர்கள் வெளி மாநிலங்களில் முகாமிட்டு லோகாண்டோ ஆப் மூலம் மோசடி செய்து வந்த நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆப்களில் தேவையில்லாமல் சிக்கி பணத்தை இழக்காதீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க | குமரியில் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி! சிதைத்த வாலிபர்கள்! வீடியோ வெளியிட்டு மிரட்டல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ