மருத்துவ சிகிச்சைக்காக வங்காளதேச நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள், ஆட்டோவில் தவறவிட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பாஸ்போர்ட்களை இளம் ஆட்டோ ஓட்டுநர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுத சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
வங்காளதேச நாட்டைச் சேர்ந்த தாஜுல் இஸ்லாம்(53), என்பவருக்கு வாய் தொண்டை புற்றுநோய் காரணமாக அவரது மனைவி ஜஹருல் இஸ்லாம்(42) மற்றும் மகன் சைபுல் இஸ்யு(22) ஆகியோருடன் தமிழகத்தின் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இன்று விமான மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர், இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து மூவரும் ஆட்டோவில் ஏறி சானிடோரியம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வேலூர் பேருந்து கிடைக்காததால் அங்கிருந்து மீண்டும் அவர்கள் ஆட்டோவில் ஏறி குரோம்பேட்டை பேருந்து நிலையம் வந்துள்ளனர்,
இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோ அங்கிருந்து சென்று விட்ட நிலையில் அவர்கள் கொண்டு வந்த கைப்பை ஆட்டோவில் தவறவிட்டு உள்ளனர் இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்ற மூவரும் இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | அரசு அதிகாரிகள் போல பேசி நகைகளை திருடும் கும்பல்! முழு விவரம்!
இந்த நிலையில் தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரவி (25), என்பவர் ஆட்டோவில் இருந்த பையை எடுத்து அதிலிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பை தன்னிடம் தான் உள்ளது வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து பையை தவறவிட்ட நபர்கள் குரோம்பேட்டை போலீசார் உடன் சென்று கைப்பையை மீட்டனர் பின்னர் ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து வந்து உடைமைகளை சரி பார்த்து பங்களாதேஷின் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் ரவி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருவது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் தவறவிட்ட கை பையை உரியவர்களிடமே ஒப்படைத்த்து விட்டு நேற்று தேர்வு எழுத சென்றிருருப்பதாகவும் கூறப்படுகிறது, இளம் ஆட்டோ ஓட்டுநர் ரவியின் நற்செயலை குரோம்பேட்டை காவல் துறையினர் பாராட்டி உள்ளதாகவும் இன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களும் நேரில் வரவழைத்து வாழ்த்துக்கள் கூறி பாரட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மேலும் படிக்க | சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? - வந்தது பரபர அலெர்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ