சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம் - ஒடிசாவில் சிக்கிய புரோக்கர்கள்
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்களில் வெளிமாநில பெண்களை வைத்து சமூக வலைத்தளம் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்த முக்கிய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிமாநில பெண்களை குறி வைத்து நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி விமான டிக்கெட் புக் செய்து கொடுத்து சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அப்படி அழைத்துவரப்படும் பெண்களை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர். அதன்படி சென்னையில் உள்ள தி.நகர், கிண்டி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்டுகளில் அறைகளை முன் பதிவு செய்து வெளிமாநில பெண்களை தங்க வைக்கின்றனர். பின்னர், Online மூலமாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி விபச்சார தொழில் செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த கும்பலை பிரபல விபச்சார புரோக்கர்கள் வடமாநிலமான ஒடிசா-புவனேஸ்வரில் தங்கி ஆன்லைன் மூலமாக இயக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தங்கியிருந்த பிரபல விபச்சார தரகர்கள் ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல் மற்றும் கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!
கைது செய்யப்பட்ட இருவரும் புவனேஸ்வர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வழிக்காவலுடன் சென்னைக்கு அழைத்துச்செல்ல நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பல்வேறு புனை பெயர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு, கடந்த 5 வருடங்களாக தலைமறைவு வாழ்க்கையிலிருந்து காவல்துறைக்கு தண்ணி காட்டிய வந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க | சாராயக்கடையை ஏலத்தில் எடுத்த பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe