வருவாய்துறை அலுவலர் சங்க போராட்டம்: வெறிச்சோடி காட்சியளிக்கும் அலுவலகங்கள்
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகளை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாட்சியர்கள், விஏஓ உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் விஏஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | அதிமுக துரோகிக்கு சிறை தண்டனை - எடப்பாடி பழனிசாமி அதிரடி!
இந்த காத்திருப்பு போராட்டத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணிகளுக்கு பாதுகாப்பு, பட்டதாரி அல்லாதவரை பதவி உயர்வை உத்தரவு படுத்திய அரசாணை உடன் வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசுத்துறை அதிகாரிகள் யாரும் இல்லாமல், இந்த அலுவலகங்கள் வெறுச்சோடி காட்சியளிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ