கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அதிமுக தொண்டர்களை நம்பி இருக்கும் கட்சி என்பதால், இந்த கட்சிக்கு வாரிசு கிடையாது, நாம் தான் வாரிசுகள். அதிமுக கட்சியை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். வழக்குப் போட்டார். எத்தனை வழக்கு போட்டாலும் எதிர்கொள்வோம். இன்று திமுகவினர் வழக்குகளை பார்த்து நடுங்கிக் கொண்டு உள்ளனர்.
மேலும் படிக்க | திமுக மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறது - அதிமுக வைகைச் செல்வன்!
அவர்களுக்கு திராணி இருந்தால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். பல கட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜி, அதிமுக இயக்கத்திற்கு துரோகம் செய்தார். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை தான் கிடைக்கும். திமுக அரசு இலவச மடிக்கணினி, தாலிக்கு தங்கும் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அப்போது நிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடரும்" என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில். நீட் தேர்வு தமிழகத்தில் விலக்கு வேண்டும் என்பது தான் அதிமுகவின் கோரிக்கை. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,600 பேர் இன்று மருத்துவம் படிக்கின்றனர். இயற்கை சீற்றத்தின் போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் துன்பத்தை களைந்து நிவாரணம் வழங்கியது அதிமுக தான்.” என்றார்.
மேலும், “கடலூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். திமுக ஆட்சியில் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கக் கூடாது. வெளியிடத்தில் அமைக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டி உள்ளதை கண்டிக்கின்றோம். இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நெய்வேலி ஜவஹர் பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை என்எல்சி இந்தியா நிறுவனம் நிரந்தரம் செய்ய வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அல்லது கூட்டணிக் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ