பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு
பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தரவும் ஆணையம் உத்தரவு.
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அவரின் நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
ALSO READ | பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
நேற்று கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் (Rajagopalan) , இன்று 14 நாட்களுக்கான நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பாலியல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வெண்டும் என்பதற்கான கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு (TN Government) விரையில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. இதுபோல குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்ததில்லை. ஆனால் தற்போது வந்துள்ள புகார்களை தாமாக முன்வந்து பள்ளி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
ALSO READ | ஆன்லைன் வகுப்புகள்: ஆசிரியர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளது தமிழக அரசு
இந்த நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தரவும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR