ஆன்லைன் வகுப்புகள்: ஆசிரியர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளது தமிழக அரசு

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்கும் ஆலோசனைக்குப் பிறகு இது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.  

Written by - ZEE Bureau | Last Updated : May 25, 2021, 02:26 PM IST
  • சென்னை தனியார் பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்களுக்கான நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
  • ஆன்லைன் வகுப்புகள் குறித்த கூடுதல் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
 ஆன்லைன் வகுப்புகள்: ஆசிரியர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளது தமிழக அரசு

சென்னை: சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விசாரணைக்குப் பிறகு அந்த ஆசிரியர் கைது செய்யப்படார். அவருக்கு 14 நாட்களுக்கான நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வெண்டும் என்பதற்கான கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு (TN Government) விரையில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்பில் நடந்துகொண்ட தகாத விதத்தைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்கும் ஆலோசனைக்குப் பிறகு இது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையில், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியருடனான தனிப்பட்ட தொடர்பு எந்த அளவிற்கு இருக்கலாம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றிய விரிவான வழிகாட்டு விதிமுறைகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ALSO READ: சென்னை தனியார் பள்ளி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஆன்லைன் வகுப்புகளில் (Online Classes) மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பள்ளிகள் சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், ஆசிரியர்களுக்கான எந்த வித ஒழுங்குமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதில் ஒரு சரியான தெளிவு வேண்டும் என ஏற்கனவே கல்வியாளர்கள் கேட்டுக்கொண்டு வந்தனர்.

முன்னதாக, பாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டு, தற்போது அவருக்கு 14 நாட்களுக்கான நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக (Sexual Harassment) தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். மேலும் இவற்றைப் பற்றி வெளியே கூறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மாணவிகளை மிரட்டியும் உள்ளார். 

இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு முதலில் ஒத்துழைக்காத பள்ளி நிர்வாகம், பின்னர் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வதாகத் தெரிவித்தது.  இது குறித்த முழு விசாரணையை கோரி 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் பள்ளி மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து பள்ளி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

ALSO READ: PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News