சென்னை அருகே வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த மதன் (PUBG MADHAN), கேம் சேனல்கள் மூலம் பிரபமான யூடியூப்பராக இருந்தார். இரு சேனல்கள் நடத்தி வந்த அவர், அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்ததாகவும் தகவல் வெளியானது. அந்த கேம் சேனல்களில் பப்ஜி உள்ளிட்ட கேம்களை ஆன்லைன் லைவ்வில் விளையாடியதுடன், அந்த கேம்களை எப்படி விளையாடுவது? என்ற ஆலோசனைகளையும் வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | PUBG Mobile பிரியர்களுக்கு Good News! இந்தியாவில் விரைவில் அறிமுகம்


கேம் விளையாடும்போது மிகவும் ஆபசமாகவும், பெண்களை கொச்சையாகவும், தரக்குறைவாகவும் பேசினார். மதனின் இந்த அருவருப்பான பேச்சுகள் இணையத்தில் வேகமாக பரவியதுடன், மிக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. தமிழகம் முழுவதும் அவரது யூ டியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஏனென்றால், அவரது சேனல்களுக்கு சப்ஸ்கிரைபர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என தெரியவந்தது.  


இதனையடுத்து, அவர் மீது சென்னை வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி என்பவர் சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில், இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சேலத்தில் தலைமறைவாக இருந்த மதனை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். 


ALSO READ | PUBG-ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ள கேம் எது தெரியுமா?


பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதனடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR