அனைத்து சமூகங்களுக்கும் பொது மயானம்: அரசு பதிலளிக்க உத்தரவு!
வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
வேலூர் அருகே பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான மயானம் அமைப்பது குறித்து நாளை மறுநாளுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரில் மயானத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்ததால், சடலைத்தை கயிறு கட்டி பாலத்தில் இருந்து கீழே இறக்கி ஆற்றி வழியே எடுத்துசெல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒவ்வொரு சாதிக்கும் தனி மருத்துவமனை, தனி காவல் நிலையம் இல்லை. அப்படி இருக்கு போது மயானத்தில் மட்டும் சாதி பார்ப்பது ஏன்? அரசே இதற்கு உடந்தையாக இருக்கிறதா? சுடுகாட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும், மரணத்தில் சாதி பார்ப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த வழக்கை சாதாரணமாக கருத முடியாது எனவும் கூறிய நீதிமன்றம், அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான மயானம் அமைப்பது குறித்து நாளை மறுநாளுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.