மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் சூரியூர் அருகே உள்ள எழுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற கல்லூரி மாணவர் தனது தந்தை முருகனுடன் மீன் பிடி திருவிழாவில் பங்கேற்று பெரிய குளத்தில் இறங்கி மீன் பிடித்து உள்ளார். இந்நிலையில் குளத்தில் தங்கவேல் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பள்ளமான சேற்றில் அவரது கால் சிக்கி தங்கவேல் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
அவருடன் வந்த அவரது தந்தை முருகன் தனது மகனை காணவில்லை என குளத்திற்குள் தேடியபோது தங்கவேல் தண்ணீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தங்கவேலுவை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே தங்கவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க | YAMAHA: ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த தமிழக இளைஞர்கள்!
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR