Puducherry: முன்னாள் அமைச்சர் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் சேர டெல்லி பயணம்
தேசிய தலைநகர் டெல்லிக்கு செல்ல, நமசிவாயமும் தீப்பைந்தனும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டனர்
புதுச்சேரி: முதன்மை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் காங்கிரசால் திங்கள்கிழமை நீக்கப்பட்ட முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ நமசிசவயம் புதன்கிழமை டெல்லியில் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது. அவரது ஆதரளவாரான, காங்கிரஸ் டிக்கெட்டில், ஒசுடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ இ.தீப்பைந்தனும் பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தேசிய தலைநகர் டெல்லிக்கு (Delhi) செல்ல, நமசிவாயமும் தீப்பைந்தனும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டனர். முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் புதன்கிழமை பிற்பகல் பாஜக தலைவர் ஜே பி நாடாவை சந்தித்து முறையாக கட்சியில் சேருவார்கள் என்று நமசிவாயத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
"எங்கள் தலைவருக்கு புதன்கிழமை பிற்பகல் பாஜக தலைவரை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. அவரும் அவரது ஆதரவாளருமான தீப்பைந்தனும் புதன்கிழமை முறையாக பாஜகவில் சேருவர். இன்னும் சில எம்.எல்.ஏக்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி, வரும் நாட்களில் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எம்.எல்.ஏ-க்கள் பாஜக (BJP) தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். விரைவில் தங்கள் முடிவை அறிவிப்பார்கள்” என்று நமசிவாயத்தின் ஆதரவாளரான முன்னாள் காங்கிரஸ் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.
ALSO READ: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
புதுச்சேரி அமைச்சரவையில் முதலமைச்சர் வி நாராயணசாமிக்கு அடுத்தபடியாக, முக்கிய பதவி வகித்தவரும், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஒருவர் பாஜகவில் சேர முடிவு செய்திருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
புதுச்சேரியில் பதவியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமி காங்கிரஸை (Congress) விட்டு வெளியேறி 2011 ல் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோதும், நமசிசவயம் காங்கிரஸ் கட்சியுடன் நிலைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ALSO READ: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR