சென்னை: தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மக்களே 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து விட்டீர்களா? இல்லையென்றால், இன்னும் நேரம் இருக்கிறது. மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்டும். எனவே போலியோ சொட்டு போட மறவாதீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொறுத்த வரை 43 ஆயிரத்து 51 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.


1995 ஆம் ஆண்டு முதல் நாட்டில் இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒலிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அண்டை நாடுகளில் இருந்து நோய் கிருமி பரவும் அபாயம் இருப்பதால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.